Monday, December 4, 2017

நெஞ்சம்

தத்தித் தாவுது நெஞ்சம்
தள்ளிப் போகுது கொஞ்சம்
தள்ளிப் போனதும் கெஞ்சும்
தேடும் இந்த நெஞ்சம்

கம்பன் வீட்டுக் கட்டுத் திண்ணை
கவிதை ஒன்றைச் சொல்ல
கவிதை திருடி இதயம் திருட
முனைவேன் நானும் மெல்ல

கவிதை சொல்லக் காத்து இருந்தேன்
பெண்ணே உன்னைக் கண்டதும்
ஐயோ கவிதை மறந்தேன் எனையும் தொலைந்தேன் 
உந்தன் கண்கள் கண்டதும்