Thursday, October 18, 2012

சொல்லிவிடு




மனதில் நிற்க்கும் வார்த்தை
அது வெளியில் வந்தால் வாழ்க்கை
கானக் குயில்கள் கெஞ்சும்
உன் மௌனம் கலைய கொஞ்சம்

வார்த்தை பேசும் விழிகள்
அது விழிகள் அல்ல மொழிகள்
கைகள் மெல்ல அலையும்
அந்த அலைவு எந்த கலையோ
கால்கள் எழுப்பும் ஓசை
மனிதன் எழுதிடாத பாஷை

கவிஞன் சொல்லா கவிதை
மௌனம் சொல்லும் ஒரு கதை
பிரியம் உண்டு என்மீது
புரிந்து கொண்டேன் இப்போது

Saturday, October 13, 2012

எனதில்லை


காதல் என்னும் போராட்டம்
கானல் அல்ல நீரோட்டம்
எழுத்தில் தொடங்கிய பரிமாற்றம்
செவி வழி ஏறியது அரங்கேற்றம்

விழிகள் நான்கிலும் ஒரு மோதல்
நம் இதயம் வீழ்ந்தது அது காதல்
துன்பங்கள் துயரில்லை நீ உடன் இருக்கையில்
எண்ணங்கள் எனதில்லை மனம் உனை நினைக்கையில்