Wednesday, October 19, 2011

துணை


தோழியே என் தோள்கள் இருந்தும்
உனை சாய்க்க முடியவில்லை
என் கைகள் இருந்தும்
உன் கண்ணீர் துடைக்க முடியவில்லை
விரல்கள் அனுப்பும்
இச்செய்தி என் துணையாக உன்னிடம்......

Friday, October 14, 2011

உயிர்



நிலவென்றேன் உனை
முகில் கொண்டு
முகம் மறைக்கிறாய்

நினைவென்றேன் உனை
கனவில் வந்து
எனை சாய்க்கிறாய்

மழையென்றேன் உனை
பூபாலமாய் வானில்
ஜாலங்கள் செய்கிறாய்

மின்னலென்றேன் உனை
புன்னகைத்து
பற்கள் காட்டுகிறாய்

பீத்தோவனின் சிம்போனி என்றேன் உனை
நீ சிரித்து
உன் குரல் ஒலிக்கிறாய்

உயிர் என்கிறேன் உனை
உன் இதயம் தனில்
ஒரு குடில் தருவாயோ......

Female:
உயிர் என்று நீ
எனை சொன்ன போது
என்ன நான் சொல்வேன்
என் உயிரோடு......

Saturday, October 1, 2011

தோழி

என் பாரம்
அதை தாங்க
பல தோள்கள்
இருந்தும்

என் சோகம்
நான் உரைப்பேன்
உன் மடிமீது
சாய்ந்து

தலை கோதி
நீ கேட்பாய்
உம் என்று
சொல்லி

என் பாரம்
அது குறையும்
என் னென்று
சொல்ல

உன் துயில் கலைத்து
நான் உரைப்பேன்
பல நூறு கதைகள்
என் துயில் கலைய
காத்திருப்பாய்
உன் கதை கூற

தோழியாக நீ கிடைத்தாய்
கடவுள் தந்த வரமோ
வரம் கிடைத்த பக்தன் நான்
வேறு என்ன கூற......