Friday, September 23, 2011

நிச்சயதார்த்தம்



மாலை மாற்றி
நமக்கு நிச்சயதார்த்தம்
நாளை தானடி
உன் குங்குமஏற்றம்

என் வாசலில்
உனக்கு ஆரத்தி
என்னோடு வா
நீ சீமாட்டி

அம்மா உன்னை
கொஞ்சி பேணுவாள்
அப்பா உன்னை
மகளென போற்றுவார்

அன்பே என்று
நானும் அழைப்பேன்
கண்ணே நீயும்
என்னோடு வந்தாள்

உன் வீட்டில்
நீ யுவராணி
என் வீட்டில்
நீ மகராணி

உன் விரல்
தலைகோத வேண்டும்
உன் நகம்
தேகம் தீண்ட வேண்டும்

இதழ்கள் விருந்துகள்
பரிமாற வேண்டும்
பற்களும் கொஞ்சம்
பசி யார வேண்டும்

நாவும் மெல்ல
நாட்டியம் ஆட
வளையல் மெட்டி
ஓசை எழுப்ப


நெஞ்சில் ஒரு
லப்டப் சத்தம்
பஞ்சும் நெருப்பும்
அக்கம் பக்கம்

கடிகார முள்போல
நாமும் இணைய
அச்சம் தேவையில்லை
மிச்சம் களைய

Wednesday, September 21, 2011

மனைவி


என் இம்சைகளும்
அக்கறை
என்ற உனக்கு
என் அக்கறையும்
இம்சை
ஆனது ஏன்...

பத்து நாள் என்
வருகை
காத்திருந்த நீ
பத்து நிமிடம்
எனக்காக
வர நேரமில்லை

Cell’ல் message உம்
Gtalk’ல் chatting உம்
மணிக்கணக்கில் அன்று
பேச கூட நேரமில்லை இன்று


அன்பே
நான் அறிவேன்
நீ செய்வது
எல்லாம் எனக்காக என்று
இருந்தும்
மனம் உன்னையே நாடுது
உன் வாசம் தேடுது.....

Saturday, September 10, 2011

தண்டனை


கத்தி யின்றி ரத்த மின்றி
நரக வேதனை
புத்தி உண்டு சித்தி உண்டு
மீள தோனலை

கள் நெஞ்சு அது கொய்து
உள்ளே சென்றாய்
என் இதயம் அதை சென்று
நீயும் பிடித்தாய்

மௌன மாக நீ நடக்க
நானும் ரசித்தேன்
கொஞ்சம் கடந்து எனை சென்று
திரும்பி சிரித்தாய்

உன் சிரிப்பை காதல் என
நானும் நினைத்தேன்
அதை கலைத்து நட்பு என
நீயும் உரைத்தாய்

என் தனிமையில் உன் நினைவுகள்
நாளும் வருகுதே
உனைப் பிரிந்து என் மனது
நாளும் வாடுதே

இந்த ஜீவன் இனி எதற்கு
எண்ணம் தோன்றுதே
உனை மறந்து நான் வாழ
எனக்கு தெரியலை

நான் வாழ உனைக் கொன்றேன்
என் இதயத்தில்
உனைக் கொன்ற என் இதயத்துக்கு
ஏது தண்டனை...................

Wednesday, September 7, 2011

முத்தம்


முகிலின் முத்தம் மழை
உளியின் முத்தம் சிலை
கதிரவனின் முத்தம் காலை
மதியின் முத்தம் மாலை
கடலின் முத்தம் அலை
கவியின் முத்தம் கலை
கதையின் முத்தம் அந்தம்
காவியத்தின் முத்தம் ஆனந்தம்
இதழில் முத்தம் காமம்
இதயத்தில் முத்தம் காதல்...