Friday, May 31, 2013

தருணம்


ஆயுள் தண்டனை வேண்டாம் கண்ணே
மரண தண்டனை போதும்
சில நொடிகள் வாழ்ந்தால் போதும்
உன் மடியில் மட்டும் பெண்ணே

உன் மௌனம் எனை கொல்லும்
கூறு தீட்டிய ஆயுதம்
துப்பாக்கி இல்லையா
ஒரு நொடியில் கொல்ல

உன் மௌனம் என் சாபம்
விமோசனம் எங்கே
விடை அறிந்தும் கேள்வி கணையோடு
உந்தன் முன் இங்கே

உன் பேச்சை நான் கேட்டேன்
சில நூறு நிமிடம்
உன் பேச்சை நான் கேட்பேன்
பல கோடி வருடம்

வரம் என்று நீ வந்தாய்
என்னோடு நட்பு கொண்டு
வரன் என்று நான் ஆனேன்
உன் கழுத்தில் தாலி கட்ட

என் சிந்தனை உன் வெளிப்பாடு
என்று மட்டும் உண்டு
உன் சிந்தனை எனை ஆட்கொண்டு
என்றோ சென்ற பின்பு

என் உலகம் உன் உலகம்
ஆகியது என்றோ
உன் உலகமும் உனக்கு வேண்டும்
தவிப்போடு என்றும்

சரியோ தவறோ தெரியாது
உன் மனதிற்கு அது புரியாது
பிரிவில் இல்லையடி சந்தோஷம்
நீ அருகில் வேண்டுமடி எப்போதும்

என்னை விட்டு நீங்காதே
என் உயிரே
நீ போனால் நான் துறப்பேன்
என் உயிரை

Saturday, May 25, 2013

எது உண்மை


பிறர் உரைத்து நாம் உணர்ந்த ஒன்றா
நம் கண்கள் கண்ட ஒன்றா
நம் உள்ளுணர்வின் வெளிப்பாடா
நம் செவிகள் கேட்ட ஒன்றா
எதுவோ

ஒலி அனைத்தும் கேட்க முடியுமா
காட்சிகள் அனைத்தும் காண முடியுமா
உள்ளுணர்வு சரிதானா
உள்ளம் தேடுவதால் மெய்யாகுமா

கண்கள் காணும் பூபாளம்
செவிகள் அறிய இயலாது
செவிகள் கேட்கும் வானொலி
காட்சிகள் இல்லை

வௌவால் ஓசை கேட்க இயலுமா
நான்காம் கோணத்தை கண்கள் காணுமா
மனதிற்கு சூது விளங்குமா
உண்மை சொல்வதுதான் உள்ளுணர்வோ

பாலில் உள்ள தண்ணீர் அறியா
கண்ணும் செவியும்
அறிய உதுவும் சுவை
ஆய்வின் விளைவா

நாம் கண்ட காட்சியின் பிளவு
நம் செவிக்கு எட்டிய ஓசையின் விளைவு
நம் ஆய்வின் முடிவு
நம் மனம் நாடும் ஒன்று
அதுவே

உண்மை என்று நாம் வகுக்கிறோம்
சரியோ தவறோ தெரியாது
பின் ஒரு வாதம் வரும் வரை
பின்னதொரு ஆய்வில்
நம் மனதிற்குள் உண்மை

Monday, March 4, 2013

வினா


விடை அறியா கேள்வி தேடல்
வினாவை நோக்கி விடையின் மோதல்
எய்தவன் அறிவான் எய்யுமிடம்
கணைகள் அறியா புகுமிடம்
வெற்றி தோல்வி தெரியாது
சரியா தவறா புரியாது
வாழ்வும் சாவும் அறியாது
நாவும் ஆடும் புது கூத்து

விடை அறியா விளையாட்டு
விதி அறியும் எது கூற்று
மனம் வெல்லும் போராட்டம்
சினம் கானல் நீரோட்டம்
பூபாலம் நிலை அல்ல
பூவே நீ நிழல் அல்ல
சரி என்று நினைத்தேன் சரியன்று
தவறென்று உரைத்தாய் தவறன்று
பிரிதல் எல்லை இப்போது
புரிதல் உண்டு எப்போதும்

Sunday, February 24, 2013

காட்சி


உன் அழகை நான் ரசித்தேன்
என் முன் இல்லை நீ
உன் சிரிப்பை நான் கேட்டேன்
என் முன் இல்லை நீ


உன் கண்கள் என்னைத் தேடுது
உன் முன் இல்லை நான்
உன் உதடும் கொஞ்சம் குவியுது
என் குரல் கேட்டுத் தான்

கைகள் மூடி நாணம் கொள்கிறாய்
நானும் உண்மை கூற
புருவும் தூக்கி கேள்வி கேட்கிறாள்
வாயும் மூடிக் கொண்டே

மௌன மொழிகள் போதும் போதும்
பேச பாஷை வேண்டாம்
சைவ வழிகள் போதும் வேண்டாம்
ஆசை எல்லை தீண்டி தாண்ட

Monday, January 28, 2013

நிசி


நிசியில் ஒரு பசி
இது உணர்சிகளின் புரட்சி
மயக்கும் உன் கதப்பு
மங்கிய ஒளி பரப்பு

தயங்கும் உன் இதழ்கள்
வருடும் என் விரல்கள்
சில நேரம் மௌனம்
பின் மெல்லிய சலனம்

முன்பே கண்ட முகம் இது
இங்கே காணும் சுகம் பெரிது
வளையல் சப்தம் மௌனம் காக்க
அச்சம் கொஞ்சம் உச்சம் காட்ட

பேதை போல நீயும் நிற்க
மடந்தை என்றேன் பற்கள் பலக்க
அரிவை என்றாய் விழிகள் சுரக்க
குழந்தை என்றேன் என்றும் எனக்கு

ஆடை அணிகலன் வாங்கியதும் இல்லை
ஆசைக்கு வாசமலர் சூட்டியதும் இல்லை
அன்பும் அரவணைப்பும் என்றும் உண்டு
நட்பும் காதலும் இளைத்த நம்மோடு

இச்சை கொண்டு காது கடிக்க
கச்சை மெல்ல நானும் கலைக்க
பசி வந்திட பத்தும் பறக்கும்
ருசி என்பது நித்தம் இனிக்கும்

மெய் தனின் மேலே புலியின் பாய்ச்சல்
வைகறை வேலை குயிலின் கூச்சல்
கனவை கலைக்க மனதும் இல்லை
புரண்டேன் அவளின் நினைவோடு