செல்போனிலும் இதயம் கண்டேன்
உன் வருகை பதித்த போது
எங்கேயோ நகர்ந்து போகுது
உன் பெயரை சுமந்த போது
கிளிக் என கண் அடிக்குது
உன் முகம் பார்த்த போது
காண்கிறேன் உன் பிம்பம்
எனை அழைத்த போது
உம் உம் என சினுங்குது
நாணம் வந்த பெண் போலே
எங்கும் எனை அழைக்குது
உன் பெயர் சூட்டியே
கண்டேன் உன் பிம்பம்
அதன் முகத்திரையில்
வருவேனடி உனை காண
இந்த சித்திரையில்
No comments:
Post a Comment