Thursday, April 14, 2016

தனிமை



உன்னை அறிய ஓர் வாய்ப்பு
உனக்காக நீ எழுதும் ஒரு தீர்ப்பு
சரியோ தவறோ தெரியாது
தனிமை திரையில் புறம் தெரியாது

சினமும் குணமும் நமக்குள்ளே
உறவும் பிரிவும் நமக்குள்ளே
அன்பும் அழுகையும் நமக்குள்ளே
வேட்கையும் வேதனையும் நமக்குள்ளே

உயரிய சிந்தனை வளர்க்க போராடு
எதிர் வரும் வசைகளை தள்ளு காற்றோடு
நேற்றைய நினைவுகள் நெஞ்சோடு
ஏற்றம் தேவை இன்று உன்னோடு

தனிமை என்பது விலங்கிலும் இல்லை
மனிதன் ஒன்றும் விலங்கினம் இல்லை
தனிமை இனிமை உணர்ந்தவன் ஞானி
தனிமை வெறுமை உணர்பவன் சேதி

தனிமை வலிமை சிலநாள் மட்டும்
ஒற்றுமை வாழ்க்கை உணர்பவர்க்கு மட்டும்
தனிமைச் சிறையில் உல்லாசம் சிலநாள்
அன்புச் சங்கிலியின் வலிமை புரியாதவர்க்கு

பழமையும் வெறுமையும் மெல்ல அசைபோடும்
புதுமையும் ஞானமும் கொஞ்சம் பொறிதட்டும்
பொறியை ஜுவாலை ஆக்கி முன்னேற்றும்
தளர்ந்தாள் ஜுவாலையில் சாம்பல் தனிமை




2 comments: