ஒரு ஜீவன் துடிக்குது
காதலை எண்ணி தவிக்குது
காதல் நவரசம்தானே
காதலி பாதரசமாக
ஒட்டி ஒட்டாமல் போவதும் ஏனோ
கண்காட்டி ஜாடைகள் செய்வதும் ஏனோ
மின்மினி பூச்சிக்கு தேவை இல்லை விளக்கு
கண்ணே பூச்சுகள் தேவை இல்லை உனக்கு
காற்றில் வருகுது கீதம்
உன் குரலாய்
தலை கோதுது
உன் விரலாய்
மலர் சூடிடும் முகையே
மெய் மறந்தேன் எனையே
சலங்கை ஒலிகள் கொஞ்சும்
மனம் மயங்குது கொஞ்சம்
நீ சிரித்திடும் போது
எனை மறக்கிறேன் மாது
உன் முகம் அது தெரியாது
என் மனதுக்கு இது புரியாது
வினாவிலே நீ யாரென
கனாவிலே நான்......
No comments:
Post a Comment