Saturday, August 29, 2020

மழலை

கவிதையும் சொற்கள் தேடுது

உன் மழலை மொழியினிலே

தமிழும் கொஞ்சம் தள்ளி ரசிக்கிது

உன் மழலை பேச்சையுமே 


ராஜாவின் ராகமும் ஸ்வரங்கள் கேக்குது

உன் மழலை சிரிப்பினிலே

என் கவிதையும் கிறுக்கலே

உன் கிறுக்கலின் கவிதையிலே


நிலவும் வெட்கித் தேயுது 

கொஞ்சம் உந்தன் அழகினிலே

உப்பு மூட்டையும் பாரமில்லை

உன்னை சுமக்கயிலே


உன் உச்சி முகர்ந்ததும் சோகமில்லை

என்தன் மனதினிலே

தத்தித் தாவுது நெஞ்சம்

உந்தன் நடையினிலே


தாரை ஆடிக் காற்றும் கொஞ்சம்

தென்றல் வீசுமாம்

உன்னை எட்டு எட்டி வைக்க

சொல்லி கொஞ்சி பேசுமாம்


தவழ்ந்து வரும் போது

பா(ர்) ரதமும் பார்குமாம்

நீ தரணி தொட்டு ஆழ

உன்னை வாழ்த்துமாம்










No comments:

Post a Comment