Tuesday, September 1, 2020

இசை

எழுத்து சொல் பொருள்  யாப்பு அணி

இலக்கணம் ஏதும் தெரியாது

கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு

திசைகள் சொல்ல தெரியாது

பத்துப்பாட்டு எட்டுத்தொகை

சங்க இலக்கியம் யானறியேன்

ரிக் யஜுர் சாம அதர்வண

நால்‌‌ வேதம் யானறியேன் 


தமிழ் தாய் உனை பாட

இவை‌யாவும் வேண்டுமா

பிழை இருந்தால் அது

மறைய இசை ஒன்று போதுமா



No comments:

Post a Comment