Tuesday, March 20, 2012

அப்பா


அன்னையின் அரவணைப்பில்
கிடந்த என்னை
சிறகுகள் விரிக்கச் செய்தாய்
தத்தித் தாவி ஓடிய போது
வானில் பறந்து காட்டினாய்
திசை அறியாத் திரிந்தபோது
நல்வழி காட்டினாய்

உனை புரியாமல்
தொடர்ந்தபோதும்
எனை புரிந்து எடுத்துரைத்தாய்
உன் பாசம் தனை
நான் அறிவேன்
வெளிக்காட்டியதில்லை நீ
நீ விரும்பியதை
செய்து முடிக்கவில்லை
எனும் தயக்கத்திலே நான்

இஷ்டம் உள்ள போது கஷ்டமில்லை
புரிந்து கொண்டேன் நான்
பாசம் வெறும் காசு இல்லை
உணர வைத்தாய் நீ

உன் மகன் இவன் என
சொல்லி வளர்த்தாய்
பல தினம்
என் தந்தை நீயென
இவ்வுலகம் கூறும்
வரலாற்றில் ஒரு தினம்

தாய் தந்தை நாம் தேர்ந்தெடுப்பதில்லை
அது கடவுளின் கையில்
என் வாழ்க்கை என் கையில்
உணரவைத்தாய் ஆதியில்

அந்தம் தனில் உணர வைத்தாய்
பாசம் என்பது எது என
உன் அஸ்தமத்தில் உணர்ந்து கொண்டேன்
வாழ்க்கை என்பது இது என....

3 comments:

  1. தாராபுரத்திலிருந்து ஒரு குரல் தந்தையின் அருமையைச் சிந்திக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. அருமை ....அருமை ....அருமையான நண்பரே .
    நாளை என் அப்பா இறந்த நாள் 23.3.1993 இல் என் அருமை தந்தை எங்களை விட்டு பிரிந்தார் .
    பத்தொன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டது ....இன்னும் பல நாட்கள் என் தலையணை கண்ணீரால் நனைந்துள்ளது .

    ReplyDelete