அன்னையின் அரவணைப்பில்
கிடந்த என்னை
சிறகுகள் விரிக்கச் செய்தாய்
தத்தித் தாவி ஓடிய போது
வானில் பறந்து காட்டினாய்
திசை அறியாத் திரிந்தபோது
நல்வழி காட்டினாய்
உனை புரியாமல்
தொடர்ந்தபோதும்
எனை புரிந்து எடுத்துரைத்தாய்
உன் பாசம் தனை
நான் அறிவேன்
வெளிக்காட்டியதில்லை நீ
நீ விரும்பியதை
செய்து முடிக்கவில்லை
எனும் தயக்கத்திலே நான்
இஷ்டம் உள்ள போது கஷ்டமில்லை
புரிந்து கொண்டேன் நான்
பாசம் வெறும் காசு இல்லை
உணர வைத்தாய் நீ
உன் மகன் இவன் என
சொல்லி வளர்த்தாய்
பல தினம்
என் தந்தை நீயென
இவ்வுலகம் கூறும்
வரலாற்றில் ஒரு தினம்
தாய் தந்தை நாம் தேர்ந்தெடுப்பதில்லை
அது கடவுளின் கையில்
என் வாழ்க்கை என் கையில்
உணரவைத்தாய் ஆதியில்
அந்தம் தனில் உணர வைத்தாய்
பாசம் என்பது எது என
உன் அஸ்தமத்தில் உணர்ந்து கொண்டேன்
வாழ்க்கை என்பது இது என....
தாராபுரத்திலிருந்து ஒரு குரல் தந்தையின் அருமையைச் சிந்திக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteAaraamuthan!
ReplyDeleteஅருமை ....அருமை ....அருமையான நண்பரே .
ReplyDeleteநாளை என் அப்பா இறந்த நாள் 23.3.1993 இல் என் அருமை தந்தை எங்களை விட்டு பிரிந்தார் .
பத்தொன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டது ....இன்னும் பல நாட்கள் என் தலையணை கண்ணீரால் நனைந்துள்ளது .