Saturday, November 5, 2011

இழப்பு


பூவின் மணம் இழந்தால் சருகு
மனிதனின் குணம் இழந்தால் மிருகம்
பேச்சை இழந்தால் ஊமை
பேச்சுரிமை இழந்தால் அடிமை
உறுப்பை இழந்தால் ஊனம்
உரிமை இழந்தால் ஈனம்
பெற்றோரை இழந்தால் அனாதை
உற்றோரை இழந்தால் பரதேசி
கல்வியை இழந்தால் அறிவில்லை
காதலை இழந்தால் உயிரில்லை
இழந்தோம் என இல்லாமல்
வாழ்ந்தோம் என பறைசாற்ற
இழக்காமல் இரு நம்பிக்கை
வெல்வோம் என்றும் இது என் கை......

No comments:

Post a Comment