Monday, November 14, 2011

என்ன சொல்ல


வெற்றியின் கண்ணீர்
தோல்வியில் புன்னகை
எதிரிக்கும் ஈகை
எதிர்பார்ப்பில்லா அன்பு
பிறர்க்காக தியாகம்
பிரிந்துசேரும் சிலதுளி மௌனம்
என்ன சொல்ல
அதை நான்
என்ன சொல்ல

கண்கள் இல்லாதவன் ஓவியம்
காது கேளாதவன் இசை
கைகள் இல்லாதவன் சிற்பம்
கால்கள் இல்லாதவன் நாட்டியம்
அரிதாரம் அற்ற ஆட்டம்
சுருதி இல்லாத நாடோடி பாட்டும்
ஒப்பனை இல்லை
இது சத்திய உண்மை

No comments:

Post a Comment