காற்று இல்லாமல் போனால்
வாசம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
சுவாசம் இங்கேது
கடல்கள் இல்லாமல் போனால்
அலைகள் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
கலைகள் இங்கேது
வானம் இல்லாமல் போனால்
நீலம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
ஜீவன் எனக்கேது
மரங்கள் இல்லாமல் போனால்
மழையும் இங்கேது
மனங்கள் இணையாமல் போனால்
காதலும் இங்கேது....
No comments:
Post a Comment