Monday, November 28, 2011

செய்தாய்


வெறும் மரமாக நான் இருந்தேன்
என்னை செதுக்கி குழலும் செய்தாய்
வெறும் குழலாக நான் இருந்தேன்
காற்றைச் செலுத்தி ஜீவன் தந்தாய்

வெறும் இசையாக நான் இருந்தேன்
வரிகள் சேர்த்து பாட்டு ஆக்கினாய்
வாய்ப் பாட்டு ஆகி நின்றேன்
ஆடல் சேர்த்து பாடல் ஆக்கினாய்

தெருக் கூத்தாக நானும் நின்றேன்
எனை இயக்கி திரைப்படம் ஆக்கினாய்
திரைப்படம் நான் என்றால் என்றும்
எந்தன் கதாநாயகி நீ அல்லவா

No comments:

Post a Comment